செவ்வாய், 2 மார்ச், 2010

1100 வருடம் பழமையான இரு இந்துக்கோவில்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு


இந்தோனேசியாவில் யாவா தீவில் ஜோக் ஜகார்த்தாவில் அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இரு இந்துகோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
1100 வருடங்கள் பழமை வாய்ந்த இரு கோவில்களும் இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப்பணியின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சக்தி வழிபாட்டினை குறிக்கும் அம்மன் சிலைகள், வினாயகர் சிலைகள், சிவபெருமான் சிலை மற்றும் நந்தி, லிங்கம் ஆகியன இந்த கோயில்களுள் இருந்ததாக கூறப்படுகின்றது.
06 மீட்டர் நீளமும் 04 மீட்டர் உயரமும் கொண்ட கோயிகளுக்குள்ளேயே இந்த சிலைகள் இருந்துள்ளன. இந்த கோயில்கள் இராஜ இராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனின் காலத்தில் கட்டப்பட்டதாக தொல்பொருளாய்வாளர் கூறியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் எரிமலை வெடித்து சிதறியதால் இந்த கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

நன்றி - தமிழ்(குறிப்புகள்)

1 கருத்து:

  1. அனேகமாக சிவ பெருமான் பிறந்த இடமாகத்தான் அது இருக்கும். பாபரோ,அவுரங்கஸீபோ ஆள் வைத்து இடித்திருக்க வேண்டும். இந்து அமைப்பினர் அனைவரும் உடனே அங்கு சென்று ஒரு கோவில் கட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சும்மா இருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு