தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா?
"இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது...." என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.
என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.
ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆங்கில மொழி ஆதிகத்துக்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
1) ஆங்கிலேயர்கள் 18 – 20 ஆம் நூற்றாண்டு வரை பலநாடுகளைப் பிடித்து ஆண்டார்கள்.
2) ஆங்கிலேயர் நாடுகளைப் பிடித்து அங்கெல்லாம் புலம்பெயர்ந்த போது தங்களது மொழியை அந்தந்த நாடுகளில் ஆட்சிமொழியாக வைத்துக்கொண்டார்கள்.
3) ஆங்கிலேயர் அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல் போன்ற துறைகளில் ஈட்டிய அளப்பரிய சாதனை.
ஆங்கில புத்தாண்டு புகழடைவதற்கு முக்கிய காரணம் உரோமர்கள் கண்டு பிடித்த நாள்காட்டியே ஆகும். முதலில் உரோம பேரரசர் யூலியஸ் சீசர் (கிமு 100 – கிமு 44) அவர்களே ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார்.
இது சமய விழாக்களை உரிய காலத்தில் கொண்டாடும் முகமாகச் செய்யப்பட்டதாகும். சீசர் (Sosigenes) என்ற வானியலாளரின் அறிவுரைப்படி ஒரு ஆண்டின் நாள்களை 365 எனவும் நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு 1,000 ஆண்டு காலத்தில் 8 நாள்களை அதிகரிகச் செய்துவிட்டது.
கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (vernal equinox) மார்ச்சு 100 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் பத்து நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 முடிந்து அதனை 400 ஆல் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று உலகம் முழுதும் கிறெகோறி செம்மைப்படுத்திய நாள்காட்டியே பின்பற்றப்படுகிறது. அந்த நாள்காட்டியின் படி சனவரி முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகும்.
ஆங்கில புத்தாண்டுபற்றி மனத்தடங்கலை வெளியிட்ட சுப்பு "சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று?" எனக் கேட்கிறார்.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!
சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையா தலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)
மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழிஇ அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டுஇ வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.
இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், சமுதாயம், நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.
இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.
தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.
தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
நன்றி: நக்கீரன்
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
அங்காடித்தெரு

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த சந்தோஷமும், சிறிய பாதிப்பும் என் மனதிற்கு உண்டு...........
மீண்டும ஒரு, பல மக்களின் உண்மை வாழ்க்கைச் சம்பவத்தை கதைக்கருவாகக் கொண்டு படமாகக் கொடுத்த வஸந்தபாலனுக்கு நன்றி.... கனியாக அஞ்சலியும், ஜோதிலிங்கமாக மகேஸின் நடிப்பு அருமை....
சென்னை ஒரு அழகான, முன்னேறிக்கொண்டிருக்கும் நகரம் அதில், வாழ்க்கைத்தரத்தில் நல்ல நிலைமையில் உள்ளவருக்கு மட்டும்தான் அது ஒரு சொர்க்கம்... மற்றவர்களுக்கு பின் தொடரும் நரகம்....
ரெங்கநாதன் தெருவை நெடு நாட்களுக்குப் பிறகு படத்தின்மூலமாக பார்த்ததில் சந்தோஷம், ஏனென்றால் நானும் சென்னையில் 1 1/2 வருடம் வேலை செய்திருக்கிறேன். வார விடுமுறையில் எனக்கும், என் நண்பர்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக இந்த ரெங்கநாதன் தெரு விளங்கியிருக்கிறது....
நமக்கு அறியப்படாத சில கேவலமான நடத்தைகளும், சம்பவங்களும் இத்தெருவில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும், எல்லா நிறுவனங்களிலும் உண்டு... தனது குடும்பத்திற்காக இளவயதில் இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களின் கனவுகளை மறந்து இது போன்ற நிறுவனங்களில் வெளியில் சொல்ல முடியாத நிலைமையில் கஷ்டப்படுகிறார்கள். இது என் தென்மாவட்ட மக்களுக்கும் பொருந்தும். அவர்களின் உண்மை வாழ்க்கையினை இப்படத்தின் மூலமாக நான் அறிந்ததற்கும், என்னை ஒரு சில காட்சிகளில் கண்கலங்க வைத்த வஸந்தபாலனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி....
என் நண்பர்களாகிய நீங்களும் இந்த படத்தை உணர்வுப்பூர்வமாக காண வேண்டும் என்று....
நன்றியிடன்......
கார்த்திக்
புதன், 3 மார்ச், 2010
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
வற்றாமல் சுரக்கும் தேனருவியாய்
வரலாறை சுமந்து வரும் மலையருவியாய்
சிந்தனையில் வைத்தோர்க்கு சுவைத்திடும்
சீரிளமையோடு மனதில் சிரித்திடும்
தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்
சிலப்பதிகாரம் சொல்லும் நீதி
மன்னர் புகழ் பாடும் பரணி
இளையோர் காதல் சொல்லும் அகநானூறு
இறைவன் புகழ் பாடும் திருமறைகள்
வாழ்க்கை வழிகாட்டும் திருக்குறள்
வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்
நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்
சுதந்திரதாகமூட்டும் பாரதி பாடல்கள்
தமிழை உயிரில் கரையவைக்கும் பாரதிதாசன் கவிதைகள்
இனிக்க ஒலிக்கும் கண்ணதாசன் பாடல்கள்
இணையத்தில் மட்டுமன்றி இனி பாரெங்கும்
பரவும் இந்த அமுத மொழி

செவ்வாய், 2 மார்ச், 2010
தமிழ் எழுத்து தோன்றிய காலம் - செந்தமிழ்செல்வி

மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்-றிய மொழி தமிழ். இன்றைய மொழிக் குடும்பங்களில் தலைசிறந்த எட்டுள் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ். உலக மொழிகள் அனைத்-துமே தமிழ் மொழியிலி-ருந்துதான் தோன்றின என்பது மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் கருத்து.
இந்நிலையில் தமிழ் மொழி எழுத்து கி.பி. 6_7ஆம் நூற்றாண்டுகளில் தோன்-றியது என்றும் அது செம்மையுற்றது சோழர்காலத்தில் என்றும் அண்மையில் மய்ய சாகித்ய அகாதெமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற பேரா. எஸ். செத்தார் என்ற கன்னட அறிஞர் கூறி-யது இந்து ஆங்கில நாளேட்டில் (8.05.2009) வெளி வந்துள்ளது. ஒரு மொழி அறிஞர் பிறமொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் அறியாத பேராசிரியராக உள்ளது வியப்பாக உள்ளது. அதுவும் ‘சங்கம் தமிழகம்’ என்ற சங்கத்தமிழ் பற்றிக் கன்னட மொழி-யில் எழுதிய நூலுக்காக விருது பெற்றபின் இவ்வாறு கூறியிருப்பது விந்தையாக உள்ளது.
ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவரைக்கேட்டால் நம் ஊர் வையா-புரிப் பிள்ளையைத்தான் காட்டுவார். ‘தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்-டில் வாழ்ந்தவர் என்று அழுத்தம் திருத்தமாகக் (தமிழ்ச்சுடர் மணிகள், பக். 38) கூறியுள்ளார். ‘மெல்லத் தமிழினிச் சாகும் என்றுரைத்தான் ஒரு பேதை; (பாரதியார்) இந்தப் பேதையோ தொல்காப்பியர் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கூறியுள்ளார்.
மேல் நாட்டுத் தமிழறிஞரான டாக்டர். கமில் சுவலபில் கூட வையா-புரியாரின் வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டுதான் ‘தமிழ் எழுத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகிறார். இருப்பினும் பல்வேறு அறிஞர்களின் கருத்துகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் தீவிரமாக ஆராய்ந்து கி.மு. 100_க்கும் கி.பி. 250_க்கும் இடையில் தோன்றியது சங்க இலக்கியம் என்ற முடிவுக்கு வருகிறார். “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)” “Taking into consideration the cumulative evidence of the linguistic, epigraphic, archeological numismalies and historical data, both internal and external, it is undoubtedly possible to arrive at the following final conclusion: the earliest corpus of Tamil Literature may be dated between 100 B.C. and 250 A.D. (on Tamil Literature of South India by Kamil Zvelebil, 1973.)”
280406
தமிழ்எழுத்து வரிவடிவத்தைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார். பழந்தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் (கி.மு. 3_ 1ஆம் நூ) தொல்- காப்பியம் (கி.மு. 2_1 ஆம் நூ) சங்க இலக்-கியம் (கி.மு. _ 1 ஆம் நூ) அரிக்கமேடு (கி.பி. 1_ 2 ஆம் நூ) பிற்காலத் தமிழ் பிராமி கல்-வெட்டுகள் (கி.பி. 3 _ 4 ஆம் நூ) இவ்வளவு காலகட்டங்களை ஆய்வு செய்யும் சுவலெபில் மொத்தத்தில் சங்க இலக்கிய நூல்களின் காலம் (கி.மு. 1_கி.பி. 4 ஆம் நூ) என்ற முடிவுக்கு வருகிறார்.
சிந்துவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்துள்ள முனைவர் மா. வாவூசி (இயக்-குநர், மனிதநேயம் அய்.ஏ.எஸ் பயிற்சி மய்யம்) எழுதியுள்ள சிந்துவெளியிலும் அதற்கப்பாலும் பழந்தமிழ்ப் பண்பாட்டு ஏகாதிபத்தியம் (2008) நூலில் சிந்து-வெளி முத்திரைகளைப்பற்றிய தமிழ் எழுத்துகளின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
“காட்டுமிராண்டிகளான ஆரியர் வருகைக்கு முன்னரே, இந்தியாவில் ஒரு தலை சிறந்த நகர நாகரிகத்தை உருவாக்-கியவர்கள் தமிழர்கள் என்பதும், அந்நாக-ரிகம் நிலவிய காலத்தே வழங்கப்பட்ட மொழி, எழுத்து பழந்தமிழ்க் குடும்-பத்தைச் சார்ந்தது என்பதும் அய்யத்-திற்கப்பாற்பட்ட உண்மைகளாகும். குறிப்பாக இன்றும் தனித்தன்மையோடு இயங்கும் தமிழ் மொழியின் முந்தைய வடிவமே சிந்து நாகரிக எழுத்து வடிவமாகும்.
பேரா. செத்தார் அசோகர் கண்டு-பிடித்த பிராமி எழுத்துகளுக்கு முன் தென்னிந்தியாவில் எந்த மொழிக்கும் எழுத்து கிடையாது என்கிறார். அசோகரின் பிராமியை முதலில் கன்னடமும் தெலுங்கும் ஏற்றுக் கொண்-டன. கி.பி. 6ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் மொழி பிராமி வரிவடிவத்தை ஏற்றுக்கொண்டது என்கிறார் செத்தார். (The Tamil Script emerged during the pallava period) 6-7 Century and attained maturity under the cholas
பிராமி வடிவத்தைப்பற்றி முனைவர் வாவூசி குறிப்பிடுவது வருமாறு:
ஆரம்ப நிலையில் பிராமி எழுத்து வடிவானது பழந்தமிழ் மொழிகளில் மிகப் பழைமையான தமிழ் மொழிக்காக உருவாக்கப்பட்டது. இவ்வரிவடிவின் ஆரம்ப நிலையே ஹரப்பா நாகரிக மக்கள் தங்களுக்குள் எழுதி வந்த எழுத்து வடிவமாகும். இத்தகு பிராமி வடிவத்தைப் பிற்காலத்தில் ஆரியமல்லா மொழியான பிராகிருதம் பயன்படுத்திக் கொண்டதால், தமிழ் மொழி தனக்-கென, வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டது. பிராமி வரிவடிவமானது சிந்து நாகரிக எழுத்து வடிவத்திலிருந்து வளர்ந்ததைப் பேரா. வேங்கடன் தெளிவு-படுத்துகிறார். எனவே பழந்தமிழ் மொழிக்-காக உருவாக்கப்பட்ட பிராமியின் ஆரம்பகால வடிவங்கள்தான், ஹரப்பா நாகரிக முத்திரைகளில் காணப்படு-கின்றன என்பது மிகச் சரியானதாகும்.
அஸ்கோ பர்போலா போலந்து, சோவியத் ஆய்வாளர்கள், திரு அய்ரா-வதம் மகாதேவன், ஹீராஸ் பாதிரியார், போன்றோர் “ஹரப்பா நாகரிக எழுத்து வடிவங்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார் முனைவர் வாவூசி.
உண்மை இவ்வாறிருக்க பேரா. செத்தார் தமிழ் மொழி பிராமி வடி-வத்தைக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில்-தான் முதல் முதல் பெற்றது என்று கூறி-யிருப்பது அவர் தம் மொழியறிவின்-மையைப் புலப்படுத்துகின்றது. இது- வேத-னைக்குரியதாகும்.
செத்தாரைப் போன்ற வேறு சில அறிஞர்கள் சிந்துவெளியில் காணப்-படும் முத்திரைகள் எழுத்து வடிவம் இல்லையென்ற கொள்கையைப் பரப்பி வருகின்றனர். ஃபார்மர் (கலிஃபோர்-னியா) விட்ஸெல் (யார்வேட் பல்கலைக்-கழகம்) என்பார் இக்கருத்தை வெளியிட, இதை மறுத்து அஸ்கோ பர்போலா (போலந்து) மெஸ்ஸிகோ விடேல் போன்ற அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
இவர்கள் அனைவருடைய கருத்து-களையும் சீர்தூக்கிப் பார்த்து ‘சிந்து-வெளி வரிவடிவங்கள் படிக்கக்கூடிய எழுத்துகளே என்றும், பெரும்பாலும் அவை திராவிட மொழியைச் சார்ந்-தவையே’என்றும் பேரா. முனைவர் அய்ராவதம் மகாதேவன் இந்து நாளிதழில் (மே 3, 2009) மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் ஆணித்தரமான சில கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.
சிந்து வெளி முத்திரைகளிலுள்ளவை படிக்கக் கூடிய எழுத்துகளே. அவை பெரும்பாலும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே.
அவை சிந்து சம வெளியில் பழக்கத்திலிருந்த திராவிட மொழியான பிராகுவி மொழியைச் சார்ந்தவையே.
ரிக்வேதத்தில் திராவிட மொழிச் சொற்கள் கடன் பெற்று சேர்க்கப்-பட்டுள்ளன.
பிராகிருத மொழியில் திராவிட மொழியின் தாக்கம் உள்ளது.
சிந்துவெளி முத்திரைகளின் தொகுப்-புகள் (ஹன்டர், பர்லோ, மகாதேவன்) சிந்துவெளி முத்திரைகளில் காணப்-படும் மொழி திராவிட மொழி குடும்-பத்தைச் சார்ந்தவையே.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை யூரி வெலன்டினோவிச் (ரஷ்யா) வால்டர் ஃபேர் சர்விஸ் (அமெரிக்கா) போன்ற அறிஞர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு உலகளாவிய அளவில் தமிழ்மொழி சார்ந்த திராவிட மொழி எழுத்து வடிவத்தைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற சூழ்நிலையில் கன்னடக் கிணற்றுத் தவளை தவறான கருத்தைத் தெரிவித்துள்ளது.
சங்க இலக்கியம் ‘வடுகர்’ என்று குறிப்பிடுவது (Vadugars are the inhabitants of present day Karnataka) கன்ன-டர்களையே என்று செத்தார் குறிப்பிட்-டுள்ளார். அதே சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107) (கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது. சங்ககால வடுகர்தான் ‘கல்லா நீண் மொழியினர்’ என்றால் 21 ஆம் நூற்றாண்டு வடுகரும் கல்லா நீண்மொழியர் தானோ-? அய்யத்திற்குரியதாக்கிவிட்டது செத்தாரின் கூற்று.
நன்றி: செந்தமிழ்செல்வி,
இலக்கியத் திங்கள் இதழ்
உலகத் தமிழர் பேரவை - GLOBAL TAMIL FORUM

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தீர்மானித்து ஆகஸ்ட் 2009 ல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உருவாக்கியதே உலகத் தமிழர் பேரவை. http://globaltamilforum.org/gtf/
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, சுவீடன், ஜோ்மனி, நெதர்லாந்து, சுவிஸ், இத்தாலி, மொறிசியஸ், மலேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளின் தமிழ் அமைப்புக்களின் ( தமிழீழ மக்கள் பேரவை-பிரான்ஸ், ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் பேரவை, நோர்வே தமிழர் பேரவை, டென்மார்க் தமிழர் பேரவை, சுவிடன் தமிழர் பேரவை, இத்தாலி தமிழர் பேரவை, தமிழினப் படுகொலைகெதிரான அமைப்பு-மொறியஸ், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், அவுஸ்திரேலியன் தமிழர் காங்கிரஸ், கனடா தமிழர் காங்கிரஸ் ( Malaysia Tamil Relief fund & Malaysian Tamil Forum) அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, வெலிங்டன் தமிழர் அமைப்பு, சுவிஸ் தமிழர் அமைப்பு, ஜோ்மனி தமிழர் அமைப்பு, பெல்ஜியம் தமிழர் அமைப்பு, நெதர்லாந்து தமிழர் அமைப்பு, அவுஸ்திரேலியா தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ) பிரதிநிதிகளும் உலகத்தமிழர் பேரவையின் உருவாக்கத்திற்கு அடிக்கற்களாக இருந்து ஓர் அணியாக தமது வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமகால அரசியல் சூழலுக்கு அமைய தமிழீழத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்த அமைப்புக்களின் கூட்டு முயற்சிகளின் முதல் வேலைத்திட்டங்களாக இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை உருவாக்குவதோடு அதன் அடிப்படையில் இலங்கைக்கெதிரான வரிச்சலுகைகளை நிறுத்தக்கோரி அரசியல் மட்டங்களில் அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.
அத்துடன் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உறுப்புக்களை இழந்தோருக்கும் உதவவும், பெற்றோர், உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும், தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு உதவவும் நாட்டில் உள்ள மானிடநேய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை பல தடைகளையும் மீறி செய்து வருகிறது.
இதன் முக்கிய வேலைத்திட்டமாக
1.)இலங்கையில் சிறைகளிலும், முகாம்களிலும், சட்டரீதியான எந்தவித நடிவடிக்கையும் எடுக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்களை விடுவிக்க வழிவகைகளை தேடுவதற்கும், அதற்கான துரித செயற்பாட்டை மேற்கொள்ளவும் உலக சட்டவாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
2.) போர்க்குற்றங்கள், மானிடநேயத்திற்கெதிரான குற்றங்களை இழைத்த இலங்கை அரசை உலக நீதிமன்றம் முன்னால் நிறுத்துதல்.
3.) அந்நிய நாடுகளின் துணையுடன், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான வழிவகைகளை தேடுவது போன்ற பல திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக செயல்படுத்தும் முகமாக பெப்ரவரி 24ம் திகதி முதல் லண்டன் நகரில் அரசியல் பிரமுகர்களுடன் பல்லின மக்களின் முன் உலகத் தமிழர் பேரவை தனது அமர்வை நடாத்த ஆரம்பித்துள்ளது.
காலனித்துவ ஆட்சிகளால் எம் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, பல அழிவுகளை சந்தித்து இன்று உரிமைகளற்ற மக்களாக வாழும் எமக்கு இன்றைய உலக சூழலில் எமது உரிமைகளை எப்படி மீண்டும் பெற்றுக் கொள்வது என்ற விடயம் பற்றியும், அதற்கான செயற்திட்டம் பற்றியும் பல வெளிநாட்டு அமைப்புக்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட இருக்கிறது.
ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும், போராட்டத்திற்கு மறு வடிவம் கொடுக்கவும் ஓரணியில் நின்று செயற்பட முன்வந்திருக்கும் 15 நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஓரணியில் நின்று எமது உரிமைகளை வலியுறுத்த முன் வந்திருக்கும் இவ் வேளையில், இந்த அமைப்புக்களைப் பலபடுத்தி அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டியது உலகம் வாழ் தமிழ்மக்களே!
நன்றி
http://www.tamilwin.com/view.php?2aSIPze0dljoK0ecQG1r4b4P98Ocd2g2F2dc2Dpi3b436QV3e22ZLu30
Alarm at Mumbai's teen suicide trend
A writer once said that more than one soul dies in a suicide.
It seems so in Neha Sawant's home. The atmosphere in the tiny flat in Mumbai has been lifeless since the 11-year-old was found hanging from her apartment window.
It has been weeks but her parents are still in deep shock. They look dazed and sleep-deprived.
Neha's distraught grandmother said in a broken voice: "Our brains are not working. We still cannot believe it."
Neha, at 11, must be one of the youngest in Mumbai to commit suicide. Figures suggest that more and more teenagers in India's financial hub are killing themselves.
Dizzying
Inexplicably, teen suicides have become an almost daily occurrence in Maharashtra - one of India's most developed states - and its capital Mumbai (Bombay).
The toll of teen suicides from the beginning of the year until 26 January 2010 stood at 32, which is more than one a day.
While there are no comparative figures for the same period in 2009, there is a consensus among the concerned authorities in Mumbai that teen suicides are spiralling out of control.
There is also a general agreement between psychologists and teachers that the main reason for the high number of teen deaths is increasing pressure on children to perform well in exams.
The scale of this largely preventable problem is dizzying - both in India and particularly in the state of in Maharashtra.
More than 100,000 people commit suicide in India every year and three people a day take their own lives in Mumbai.
Suicide is one of the top three causes of death among those aged between 15 and 35 years and has a devastating psychological, social and financial impact on families and friends.
'Needless toll'
World Health Organisation Assistant Director-General Catherine Le Gals-Camus points out more people die from suicide around the world than from all homicides and wars combined.
"There is an urgent need for co-ordinated and intensified global action to prevent this needless toll. For every suicide death there are scores of family and friends whose lives are devastated emotionally, socially and economically," she says.
In Mumbai the authorities are so alarmed by the scale of the problem that they have began a campaign, Life is Beautiful, which aims to help students cope with academic pressure. Psychologists visit government schools in Mumbai once a week to train teachers dealing with students' problems.
Sharadashram Vidyamandir school boasts illustrious alumni such as cricketers Sachin Tendulkar and Vinod Kambli. It has been holding parent-teacher assemblies where parents can receive tips on tackling the pressures children face.
And yet such sessions could not prevent 12-year-old Shushant Patil's death. He was found hanging in the school toilet on 5 January.
Mangala Kulkarni is the principal of the girls' section of the school. She says that ultimately families need to be more proactive when it comes to stopping students from feeling stressed.
"The children don't realise they have more avenues than academic successes. They need to be made to realise this by their families from childhood," she said.
Blockbuster
A helpline in Mumbai, called Aasra, has been operating for several years to tackle the problem.
The director of the helpline, Johnson Thomas, says the problems today's children face are manifold: "They have peer pressure, they have communication problems with their parents, broken relationships, academic pressure and fear of failure," he says.
The home ministry estimates that for every teen suicide in Mumbai there are 13 failed attempts.
One theory behind the recent rise is the influence of a recently released Bollywood blockbuster, Three Idiots, which has a scene where an engineering student is shown committing suicide after a mediocre exam result.
The film's impact has been debated and scrutinised in prime time television shows, with many directly blaming it for adding to the problem.
But Mumbai clinical psychologist Rhea Timbekar argues that it would be wrong to blame the film, which she says strives to explain that parents should not put too much pressure on their children.
Ms Timbekar says that she recently met a child who had not eaten for four days.
The child's parents said they were upset with him because he only got 89% in exams and stood third in the class, compared to coming first in previous years.
"Such parents need to be counselled", she asserts.
Ms Timbekar said that another explanation for the high teen suicide rate was "copycat suicides" where children read about suicides in newspapers and decide to do the same thing themselves.
'Extreme steps'
Dilip Panicker, an eminent psychologist in Mumbai, says that pressure of exams is alone is too simplistic an explanation.
"At one level school pressures and expectations from parents are a valid reason," he says, "but that's always been there.
"In fact, parents used to beat up their kids in our time. What's changed is that today children are more aware, they have more exposure. They are more independent. So they blame themselves for failures and take extreme steps."
Psychologists also argue that the definition of a teenager needs to be revised in 2010.
"Today's 11-year-olds are the new teens. What we did at the ages of 14 and 15 children can do at 11 today," says Rhea Timbekar.
She demolishes the theory that children are more likely to be spontaneous in committing suicide, as opposed to adults who start with an idea, proceed with a plan and end with action.
"A child doesn't just wake up in the morning and says I will commit suicide today," she argues. "Something has gone amiss in their lives quite early on and suicides are a manifestation of that."
The breakdown of India's traditional family system is also being blamed for the problem. In a city like Mumbai - where it is common for both parents to work - children tend to become reclusive and watch too much television.
Dilip Panicker argues that there is a simple solution.
"If parents love their children unconditionally, with all their successes and failures, the problem would be greatly alleviated."
THANKS - BBC NEWS

1100 வருடம் பழமையான இரு இந்துக்கோவில்கள் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் யாவா தீவில் ஜோக் ஜகார்த்தாவில் அமைந்துள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இரு இந்துகோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
1100 வருடங்கள் பழமை வாய்ந்த இரு கோவில்களும் இஸ்லாமிய பல்கலை கழகத்திற்கு நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப்பணியின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சக்தி வழிபாட்டினை குறிக்கும் அம்மன் சிலைகள், வினாயகர் சிலைகள், சிவபெருமான் சிலை மற்றும் நந்தி, லிங்கம் ஆகியன இந்த கோயில்களுள் இருந்ததாக கூறப்படுகின்றது.
06 மீட்டர் நீளமும் 04 மீட்டர் உயரமும் கொண்ட கோயிகளுக்குள்ளேயே இந்த சிலைகள் இருந்துள்ளன. இந்த கோயில்கள் இராஜ இராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழனின் காலத்தில் கட்டப்பட்டதாக தொல்பொருளாய்வாளர் கூறியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் எரிமலை வெடித்து சிதறியதால் இந்த கோயில்கள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
நன்றி - தமிழ்(குறிப்புகள்)
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)