
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த சந்தோஷமும், சிறிய பாதிப்பும் என் மனதிற்கு உண்டு...........
மீண்டும ஒரு, பல மக்களின் உண்மை வாழ்க்கைச் சம்பவத்தை கதைக்கருவாகக் கொண்டு படமாகக் கொடுத்த வஸந்தபாலனுக்கு நன்றி.... கனியாக அஞ்சலியும், ஜோதிலிங்கமாக மகேஸின் நடிப்பு அருமை....
சென்னை ஒரு அழகான, முன்னேறிக்கொண்டிருக்கும் நகரம் அதில், வாழ்க்கைத்தரத்தில் நல்ல நிலைமையில் உள்ளவருக்கு மட்டும்தான் அது ஒரு சொர்க்கம்... மற்றவர்களுக்கு பின் தொடரும் நரகம்....
ரெங்கநாதன் தெருவை நெடு நாட்களுக்குப் பிறகு படத்தின்மூலமாக பார்த்ததில் சந்தோஷம், ஏனென்றால் நானும் சென்னையில் 1 1/2 வருடம் வேலை செய்திருக்கிறேன். வார விடுமுறையில் எனக்கும், என் நண்பர்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக இந்த ரெங்கநாதன் தெரு விளங்கியிருக்கிறது....
நமக்கு அறியப்படாத சில கேவலமான நடத்தைகளும், சம்பவங்களும் இத்தெருவில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும், எல்லா நிறுவனங்களிலும் உண்டு... தனது குடும்பத்திற்காக இளவயதில் இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களின் கனவுகளை மறந்து இது போன்ற நிறுவனங்களில் வெளியில் சொல்ல முடியாத நிலைமையில் கஷ்டப்படுகிறார்கள். இது என் தென்மாவட்ட மக்களுக்கும் பொருந்தும். அவர்களின் உண்மை வாழ்க்கையினை இப்படத்தின் மூலமாக நான் அறிந்ததற்கும், என்னை ஒரு சில காட்சிகளில் கண்கலங்க வைத்த வஸந்தபாலனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி....
என் நண்பர்களாகிய நீங்களும் இந்த படத்தை உணர்வுப்பூர்வமாக காண வேண்டும் என்று....
நன்றியிடன்......
கார்த்திக்
நல்ல விமர்சனம். கனிமொழியாள்.
பதிலளிநீக்குகனிமொழி இந்த பெயர் எனக்கு பிடிக்கும்..
மிகுந்த.. நாட்களுக்குப் பிறகு... உங்களின் கருத்தைப் பார்த்தேன் சகோதரி,.... ஏனோ... என்னால் இவ்வலைப்பதிவில் கூடிய நேரம் ஒதுக்கமுடியவில்லை... உங்களின் கருத்துக்கு நன்றி...
பதிலளிநீக்குகனிமொழி என்பது... என்னவள் பெயர்... அதனால்தான்... அவளின் பெயர் சார்ந்ததாக...இவ்வலைப்பதிவின் தலைப்பை அமைத்துள்ளேன்...